Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
1 நாட்களாக மரத்தில் தனிமைப்பட்டிருந்த மாணவன்
வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வசதி இல்லாத காரணத்தால் மரத்தின் மீது கட்டிலை கட்டி வாலிபர் ஒருவர் தன்னை தனிமைப்படுத்தி கொண்டுள்ளார்.
கொ ரோனா தொ ற்றுக்கு உள்ளவர்களில் பலர் மருத்துவமனைகளுக்கு சென்று சிகிச்சை பெறுகின்றனர். மேலும் பலர் வீடுகளிலேயே தங்களைத் தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சையில் உள்ளனர்.
ஆனால் பெரும் தொ ற்று ஏற்பட்டு மருத்துவமனைகளுக்கு செல்ல இயலாத நிலையிலும், வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ள இயலாத சூழ்நிலையிலும் பலர் உள்ளனர்.
இதற்கு உதாரணமாக தெலுங்கானா மாநிலம் நலகொண்டா மாவட்டத்தின் ஒரு பழங்குடி குக்கிராமமான கோத்தனந்திகொண்டாவில் வசிக்கும் ஒருவர் கொ ரோனா தொ ற்றுக்கு ஆளான நிலையில் வசதி இல்லாத காரணத்தால் மரத்தில் கட்டில் கட்டி தனிமைப்படுத்திக் கொண்ட சம்பவம் அ திர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிவா (18) என்ற மாணவரே இவ்வாறு தனிமைப்பட்டுள்ளார்.குடும்பத்தை சேர்ந்த 4 உறுப்பினர்களுடன் ஒற்றை அறையுடன் கூடிய வீட்டில் வசித்துவரும் சிவாவுக்கு கொ ரோனா தொ ற்று ஏற்பட்டுள்ளது.
வீட்டிலேயே சிவா தனிமைப்படுத்திக்கொள்ளுமாறு சுகாதார அதிகாரிகள் அவரை அறிவுறுத்தினர். ஆனால் அதற்கான வசதி அவரது வீட்டில் இல்லை.
தங்களுடைய வீட்டில் ஒரே ஒரு அறை மட்டும் உள்ளதால் குடும்ப உறுப்பினர்களுக்கும் தொ ற்று ஏற்பட்டு விடும் என்று அஞ்சிய சிவா, தன்னுடைய வீட்டின் முன் இருக்கும் உயரமான மரத்தில் தனிமைப்பட முடிவு செய்தார். மரத்தில் மூங்கில் மூலம் தங்குமிடமொன்றை அமைத்து, அதில் தன்னைத் தனிமைப் படுத்தி கொண்டிருக்கிறார்.
11 நாட்களாக அவர் மரத்தில் இருக்கிறார்.அவருக்குக் கொடுக்க வேண்டிய மருந்து மாத்திரைகள், உணவு ஆகியவற்றை குடும்ப உறுப்பினர்கள் நேரம் தவறாமல் கயிறு மூலம் சிவாவுக்கு அனுப்பி வைக்கின்றனர்.
அந்த கிராமத்தில் 350 குடும்பங்கள் உள்ளன. ஆரம்ப சுகாதார மையம் 5 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ளது. மருத்துவ அவசர நிலை ஏற்பட்டால், 30 கிலோமீற்றர் தொலைவிற்கு கிராம மக்கள் செல்ல வேண்டியுள்ளது.