Kilinochchi NET

நாட்டில் மீண்டும் 6 மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் மின் விநியோகத்தடையாம் : மின்சாரசபை

பாவனையாளர்களுக்கான மின்விநியோகத்தில் தடை

நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஒரு லட்சத்து 50 ஆயிரத்தும் அதிகமான பாவனையாளர்களுக்கான மின்விநியோகம் தடைப்பட்டுள்ளது.

மின்சக்தி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள 6 மாவட்டங்கள் உட்பட நாட்டின் பல பகுதிகளில் இவ்வாறு மின்விநியோகத்தடை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை நாட்டின் பல பாகங்களில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக 12 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்