Kilinochchi NET

வவுனியாவில் கொரோனா நோயாளர்களுக்காக இரவு பகலாக முன்மாதிரியாக செயற்படும் இளைஞர்கள் : குவியும் பாராட்டுக்கள்

வவுனியாவில் கொரோனா நோயாளர்களுக்காக இரவு பகலாக முன்மாதிரியாக செயற்படும் இளைஞர்கள் : குவியும் பாராட்டுக்கள்

கொரோனா தொற்றுக்குள்ளாகும் நோயாளர்களை தங்க வைப்பதற்காக இரவு, பகலாக வவுனியா இளைஞர்கள் முன்மாதிரியாக செயற்பட்டு வருகின்றனர்.

நாட்டின் கொரோனா மூன்றாம் அலையின் தாக்கமானது வேகமாக அதிகரித்து வரும் நிலையில் வவுனியா மாவட்டத்திலும் கொரோனா வைத்தியசாலைகளை நிறுவ அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

குறித்த வைத்தியசாலைகளில் சிகிச்சை பெறும் நோயாளர்களுக்கு தேவையான கட்டில்களை இளைஞர்கள் முன்வந்து வடிவமைத்து வருகின்றனர். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் ஏற்பாட்டில் அதனுடன் இணைந்து செயற்படும் இளைஞர்கள், இரவு பகலாக இந்த செயற்பாட்டை முன்னெடுத்துள்ளனர்.

10 நாட்களில் 10 ஆயிரம் கட்டில்களை அமைக்கும் செயற்பாட்டை நாடு பூராகவும் இளைஞர் சேவைகள் மன்றம் முன்னெடுத்துள்ள நிலையில், வவுனியா மாவட்ட இனைளஞர் சேவைகள் மன்ற இளைஞர்கள் 40 கட்டில்களை வடிவமைத்து வருகின்றனர். இரும்பிலான கட்டில்களாக அதனை வடிவமைத்து வருகின்றனர்.

பல இளைஞர்கள் இன்று வழிதவறிப் போயுள்ள நிலையில் நாட்டின் தற்போதைய பிரச்சனையை கவனத்தில் கொண்டு இரவு பகவலாக கெரோனா நோயாளர்களுக்காக கட்டில்களை அமைத்து வரும் இந்த இளைஞர்களின் செயற்பாடானது சமூகத்தில் அனைவரதும் கவனத்தை ஈர்த்து வருகின்றது.