Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
வவுனியா பட்டானிச்சூர் கிராமத்தில் திடீர் சுற்றிவளைப்பு : பலருக்கு எச்சரிக்கை விடுப்பு
இலங்கையில் கோவிட் தொற்று பரவலானது தற்போது தீவிரமடைந்து வருகிறமையினையடுத்து நாடு முழுவதும் 3 நாட்கள் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதுடன் அத்தியாவசிய சேவைகள் , மருந்தகங்கள் என்பனவற்றிக்கு மாத்திரம் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் முஸ்ஸிம் மக்களின் நோன்புப் பெருநாள் தற்போது அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றன. இதனையடுத்து பெரும்பான்மையான முஸ்ஸிம் சமூகத்தினர் வசிக்கும் வவுனியா பட்டானிச்சூர் கிராமத்திற்கு இன்று (15.05.2021) காலை 10.00 மணியளவில் சுகாதார பிரிவினருடன் பொலிஸார் இணைந்து திடீர் சுற்றிவளைப்பினை மேற்கொண்டிருந்தனர்.
இதன் போது குறித்த கிராமத்தில் அரசாங்கத்தின் பயணத்தடை , முகக்கவசமின்றி , விளையாட்டில் ஈடுபடல் , மக்கள் ஒன்றுகூடல் , வர்த்தக நிலையங்கள் திறப்பு என பல்வேறு செயற்பாடுகளில் அரச உத்தரவு மற்றும் சுகாதார விதிமுறைகளை மீறி செயற்பட்டவர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு அவர்களின் தகவல்களும் சேகரிக்கப்பட்டன.
மேலும் ஆசனத்திற்கு மேலதிகமாக மோட்டார் சைக்கில் , முச்சக்கரவண்டியில் பயணம் செய்தவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்று கூடியிருந்தமை போன்ற செயற்பாட்டில் ஈடுபட்டவர்களும் எச்சரிக்கப்பட்டனர்.
குறித்த கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் அதிகளவிலான கொரோனா தொற்றார்கள் இனங்காணப்பட்டு அக் கிராமம் முற்றாக முடக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.