Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி திருமுறுகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன் புதிய கொரோனா சிகிச்சை நிலையம்
கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி பகுதியில் 350 கட்டில்களுடன் புதிதாக கொரோனா சிகிச்சை நிலையம் இன்று (14) முதல் தயார்ப்படுத்தப்படடுள்ளது.
ஏற்கனவே வட மாகாணத்திற்கான தொற்று நோய் மருத்துவமனையான கிருஸ்ணபுரம் வைத்தியசாலை செயற்பட்டு வந்த நிலையில் தற்போது அதற்கு மேலதிகமாக மலையாளபுரம் கிராமத்தில் இதுவரை காலமும் இராணுவ வைத்தியசாலையாக இருந்து வந்த நிலையம் தற்போது கொரோனா சிகிச்சை நிலையமாக 07.05.2021 அன்று தொடக்கம் மாற்றப்பட்டுள்ளது.
தற்போது கிளிநொச்சி பாதுகாப்பு தலைமையகத்தின் கீழ் உள்ள திருமுறுகண்டி பகுதி இராணுவ முகாம் கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக இன்றிலிருந்து மாற்றப்படுகிறது. குறித்த தனிமைப்படுத்தல் நிலையத்தை இன்று 14.05.2021 கிளிநொச்சி மாவட்ட பாதுகாப்பு படைகளின் கட்டளை அதிகாரி மேஜர் ஜெனரல் ஹரேந்திர ரணசிங்க, கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் உள்ளிட்ட குழுவினர் பார்வையிட்டனர்.
இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் சரவணபவன் தெரிவிக்கையில் கிளிநொச்சி மாவட்டத்தில் 06 கொரோனா சிகிச்சை நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார்.
வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்