Kilinochchi NET

கிளிநொச்சி மாவட்டமும் முடக்கத்தில் : வீதிகளில் பாதுகாப்பு பிரிவினர் கடமையில்

நாடாளாவிய ரீதியில்

நாடாளாவிய ரீதியில் பயணத்தடை அமுல்படுத்தப்பட்டுள்ள நிலையில் கிளிநொச்சி மாவட்டத்தின் இயல்பு வாழ்க்கை முழுமையாக முடங்கியுள்ளது.

கொரோனா வைரஸ் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்குடன் நாடாளாவிய ரீதியில் நேற்று இரவு முதல் பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிளிநொச்சியில் மாவட்டம் தழுவிய ரீதியில் காவல்துறையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதுடன், அத்திய அவசிய தேவைகள் நிமித்தம் வெளியில் திரிவோரை தவிர ஏனையவர்கள் காவல்துறையினரால் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.

அனைத்து வியாபார நிலையங்களும் மூடப்பட்டுள்ளதுடன், தனியார் மருத்துவ மனைகள் மற்றும் ஒருசில மருந்தகங்கள் திறக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

வவுனியா கொரோனா சிகிச்சை நிலையத்திற்கு வர்த்தக சங்கத்தினரினால் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகள்