விநாயகர் சிலைகளை உருவாக்கும் இஸ்லாமிய இளைஞர் : இணையத்தில் குவியும் பாராட்டுகள்

இந்தியாவின் மும்பையிலுள்ள இஸ்லாமிய கைவினைஞர் ஒருவர், விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலைகளை உருவாக்கி வருகிறார்

மும்பையின் தாராவி, ஷன்டி நகரத்தைச் சேர்ந்த யூசுப் ஸகாரியா கல்வானி (40) என்ற இந்த மண்பாண்ட கைவினைஞர் தனது இரு சகோதரர்களுடன் இணைந்து 13 அங்குல உயரமான, சூழலுக்கு இணக்கமாக கலிமண் விநாயகர் சிலைகளை உருவாக்கியுள்ளார்.

எதிர்வரும் 22 ஆம் திகதி சனிக்கிழமை இந்துக்கள் விநாயகர் சதுர்த்தியை கொண்டாட ஆயத்தமாகி வருகின்றனர்.

விநாயகர் சதுர்த்திக் கொண்டாட்டங்களில் ஈடுபடும் பக்தர்கள், அலங்கரிக்கப்பட்ட விதவிதமான விநாயகர் சிலைகளை ஊhவலமாக எடுத்துச் சென்று கடலில் கரைப்பது வழக்கம்.

கொரோனா பரவலால் தனது மட்பாண்ட கைத்தொழில் பாதிக்கப்பட்டதால் வருமான இழப்பு ஏற்பட்டதாகவும், தனது வருமானத்தை மீளக்கட்டமைப்பதற்காகவும், சுற்றாடல் நட்புறவை ஊக்கப்படுத்துவதற்காக தான் இந்த சிலைகளை உருவாக்க தீர்மானித்ததாக கல்வானி தெரிவித்துள்ளார்.

விநாயகர் சிலைகள் நீரில் கரைக்கப்படுவதால் சூழல் மாசு ஏற்படுவதாக நீண்டகாலமாக விமர்சனமங்கள் இருந்துவருகின்றன. எனினும், இந்த சிலைகளை நீரில் கறைப்பதால் எவ்வித மாசுக்களும் ஏற்படாது என அவர் தெரிவித்தார். அத்துடன், இவற்றின் விதைகள் காணப்படுவதாகவும் அவை கறைக்கப்பட்ட பின்னர் அந்த விதைகள் மண்ணில் முளைக்கும் என்னும் கூறுகிறார்.

800 சிலைகளை உருவாக்குவதற்கான கட்டளைகள் (ஓடர்கள்) தனக்கு கிடைத்துள்ளதாகவும், இச்சிலைகளின் விலை 1500 இந்திய ரூபாய்கள் என்றும் தெரிவித்துள்ளார்.

‘நான் இந்து கடவுள் சிலையை உருவாக்குவது என்ன பெரிய விடயம்? இந்தியா ஒரு மதசார்பற்ற ஜனநாயக நாடு. நாங்கள் பல்லின கலாசாரங்களுடன் ஒன்றாக வளர்ந்துள்ளோம்’ என யூசுப் ஸகாரியா கல்வானி கூறியுள்ளார்.