கிளிநொச்சியில் காணியொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்பு

கிளிநொச்சி பிரதேசத்தில் காணியொன்றிலிருந்து வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த வெடிபொருட்கள் இன்றையதினம் கிளிநொச்சி – பச்சிலைப்பள்ளி பிரதேசத்தில் தர்மக்கேணி பகுதியில் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த பகுதியில் காணி உரிமையாளர் ஒருவர் வயல் விதைப்பு செய்வதற்காக காணி துப்புரவு பணியில் ஈடுபட்டபோது சில வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன.

சம்பவம் தொடர்பில் காணி உரிமையாளரால் பளை பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதையடுத்து சம்பவ இடத்திற்கு பொலிஸார் சென்று விசாரணைகளை மேற்க்கொண்டுள்ளனர்.

மேலும் வெடிபொருட்களை மீட்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுத்து வருகின்றனர்.