Kilinochchi NET

கிளிநொச்சியில் பல பொலிஸாருக்கு கொரோனா தொற்று பொலிஸ் நிலையமும் பூட்டு

கிளிநொச்சி பொலிஸ் தலைமையகம் இன்று வெள்ளிக்கிழமை முதல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

அங்கு பணியாற்றும் 22 பொலிஸ் உத்தியோகத்தரகளுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கின்றது.

இதேவேளை அக்கராயனில் அமைந்துள்ள பொலிஸ் நிலையத்திலும் இரண்டு பொலிஸாருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.