Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
மறைந்த நடிகர் விவேக்கின் ஞாபகார்த்தமாக மரக்கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டது. கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் பராசக்தி விநாயகர் ஆலயத்தில் இன்று காலை நாட்டி வைக்கப்பட்டது.
மறைந்த இந்திய ஜனாதிபதி அப்துல்கலாமின் நண்பரும், நடிகருமான விவேக்கின் மர நடுகை பொது பணியில் இணையும் வகையில் அவரது ரசிகரான மலையாளபுரம் பகுதியைச்சேர்ந்த குகதாஸ் என்பவரால் 50 மரக்கன்றுகள் நாட்டுவதற்கான ஏற்பாடுகள் இன்று மேற்கொள்ளப்பட்டது.
அதற்கு அமைவாக குறித்த மரக்கன்றுகள் இன்று விசேட வழிபாட்டினை தொடர்ந்து ஆலய வளாகத்தில் நாட்டி வைக்கப்பட்டது. இதன்போது கிராம சேவையாளர், கிராம அபிவிரு்ததி உத்தியோகத்தர், கிராம மட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகள், இளைஞர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
முதல் கட்டமாக நாட்டி வைக்க்பப்ட்ட குறித்த நிகழ்வு எதிர்வரும் காலங்களில் குறித்த கிராமத்தின் பல பகுதிகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கதாகும்.
வவுனியா நகரின் இரவு நேர காட்சி : அழகிய பாடலுடன்