Kilinochchi NET

கிளிநொச்சி மலையாளபுரம் இராணுவ முகாம் கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம்

கிளிநொச்சி மலையாளபுரம் பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் கொவிட் 19 சிகிச்சை நிலையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இராணுவத்தினரின் பங்களிப்புடன் அமைக்கப்பட்ட குறித்த வைத்தியசாலை 230 படுக்கை வசதிகளுடன் தனது சேவையை இன்று நள்ளிரவு முதல் சேவையை ஆரம்பிக்க உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி வைத்தியசாலையின் நிர்வாக கட்டமைப்பின் கீழ் அவ்வைத்தியசாலை வைத்தியர்க்ள, தாதியர் உள்ளிட்ட சேவையாளர்களை உள்ளடக்கியு்ம, மருத்துவ பொருட்களை கொண்டும் குறித்த சிகிச்சை நிலையம் இன்று நள்ளிரவு முதல் சேவையை ஆரம்பிக்கின்றது.