மன்னார் மடு அன்னையின் ஆவணி திருவிழா

மன்னார் மடு அன்னையின் ஆவணி திருவிழா

மன்னார் மருதமடு அன்னையின் ஆவணி திருவிழா இன்றைய தினம் சனிக்கிழமை காலை சிறப்பாக இடம் பெற்றது.

இன்று சளிக்கிழமை காலை 6.15 மணியளவில் கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்னாண்டோ தலைமையில் மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை, காலி மறை மாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபேட் அன்ராடி ஆகியோர் இணைந்து திருவிழா திருப்பலியை கூட்டுத்திருப்பலியாக ஒப்புக்கொடுத்தனர்.

இந்த நிலையில் இலங்கையின் பல பாகங்களில் இருந்தும் மக்கள் அன்னையின் ஆசீர்வாதத்தை வேண்டி மடுத்திருத்தலத்திற்கு வருகை தந்தனர்.

திருவிழா திருப்பலியை தொடர்ந்து மடு அன்னையின் திருச் சொரூப பவணி இடம்பெற்றதோடு மடு அன்னையின் ஆசி பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.

குறித்த திருவிழா திருப்பலியில் அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அரசியல் பிரதிநிதிகள் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் இருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு மடு அன்னையிடம் ஆசி பெற்றமை குறிப்பிடத்தக்கது.