Kilinochchi NET

கொழும்பில் இருந்து சென்ற வாகனம் விபத்து – அதிஷ்டவசமாக உயிர்தப்பிய சுமந்திரன் எம்.பி

இன்று காலை ஏற்பட்ட விபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் தெய்வாதீனமான உயிர்தப்பியுள்ளார்.

கொழும்பில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த அவரின் வாகனம் விபத்திற்குள்ளாகியுள்ளது எனினும் சுமந்திரனுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.

சுமந்திரன் பயணித்த வாகனம் கடுமையாக விபத்துக்குள்ளானதில் முழுமையாக சேதமடைந்துள்ளது.

மழை பெய்து கொண்டிருந்த போது, அதிவேக நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது வாகனம் வீதியில் வழுக்கி, பலமுறை உருண்டு விழுந்து விபத்திற்குள்ளாகியுள்ளது. எனினும் வேறு வாகனம் ஒன்றின் மூலம் அவர் கல்முனை நோக்கி பயணித்துள்ளார்.