Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
முல்லைத்தீவு பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உண்ணாப்புலவு பகுதியில் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் தாக்குதல் நடத்த வந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்கேதநபர்கள் மூவரும் நேற்றைய தினம் பொலிஸாரிடம் சிக்கியுள்ளதாக தெரியவருகிறது.
சந்கேதநபர்கள் வாள்கள் மற்றும் பொல்லுகளுடன் உண்ணாப்புலவு பகுதியில் வசிக்கும் நபர் ஒருவர் மீது தாக்குதல் நடத்த வந்துள்ளனர்.
இந்த நிலையில் வீட்டு உரிமையாளர் மீது தூள் வீசிவிட்டு தாக்குதல் நடத்த முற்பட்ட வேளை வீதியால் சென்ற இளைஞர் ஒருவர் சம்பவத்தை அவதானித்து ஊர் மக்களை அழைத்துள்ளார்.
இதன்போது சந்தேகநபர்கள் இருவர் தப்பிச் செல்ல முற்பட்ட வேளை மக்களால் மடக்கி பிடிக்கப்பட்டு நையப்புடைக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
இதேவேளை இவர்களை ஏற்றி வந்த முச்சக்கரவண்டி சாரதியும் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.இதனையடுத்து மூவரிடமும் முல்லைத்தீவு பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.