Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பூநகரி பிரதேச சபைக்குட்பட்ட கிராஞ்சி கடலுக்குள் தொடர்ச்சியாக மீன் பிடிக்குச் செல்ல தடை விதித்துள்ளதாக கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமது பூர்விகமாக கிராஞ்சி கடலையே தொழிலுக்காக கொண்டுள்ளனர். இந்நிலையில் தற்போது புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கடற்படை அதிகாரி ஒருவரினால் கிராஞ்சி கடல் தொழிலாளர்கள் தொழிலுக்குச் செல்ல முடியாமல் தடுத்துள்ளார்.
தமது வாழ்வாதாரமாகக் கடல் தொழிலையே நம்பி வாழ்கின்ற நிலையில் கடந்த சில நாட்களாக தம்மை மீன்பிடி தொழிலுக்குச் செல்வதைத் தடுத்துள்ளனர்.
குறித்த கடற்படை அதிகாரியினால் சில வருடங்களுக்கு முன் நாம் தாக்கப்பட்டிருந்த நிலையில் பின் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க அவரை மாற்றம் செய்து பொது மன்னிப்பும் வழங்கப்பட்டிருந்தது.
அதன் பின் தாம் இதுவரை காலமும் நிம்மதியாகத் தொழிலில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர் எனவும் தற்போது மீண்டும் அவரை. தமது கிராஞ்சி கடற்பரப்புக்குப் பொறுப்பு வாய்ந்த அதிகாரியாக நியமித்தமையால் மீண்டும் தமக்குப் பிரச்சனை வந்துள்ளதாகத் தெரிவிக்கின்றனர்.
கடல் தொழில் செய்வதற்கு தம்மிடம் முழுமையான ஆதாரம் இருந்த போதிலும் கூட சிறுபிள்ளைத்தனமான காரணங்களைக் காட்டி நம்மைத் தொழிலில் ஈடுபடாமல் தடுத்துள்ளார் வரும் தெரிவித்துள்ளனர்.
மேலும் தம்மை அடிமைகள் போல் நடத்துவதாகவும் தகாத வார்த்தை பிரயோகங்கள் பேசுவதாகவும் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனத்தில் எடுத்து தம்மைத் தொழிலுக்குச் செல்ல அனுமதிக்குமாறும் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.