Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
புதிய உள்ளூர் அதிகார சபைகளை உருவாக்குதல், ஏற்கனவே உள்ள அதிகார சபைகளை தரமுயர்த்துதல் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.
இக்கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தலைமையில் நேற்று இடம்பெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தில் தற்போதுள்ள கரைச்சி பிரதேச சபையினை கிளிநொச்சி நகர சபையாகவும் கரைச்சி பிரதேச சபை மற்றும் கண்டாவளை பிரதேச சபை என மூன்று சபைகளை உருவாக்குவது தொடர்பிலான திட்ட முன்மொழிவில் இனங்காணப்பட்ட குறைபாடுகளை நிவர்த்தி செய்யும் வகையில் இக் கலந்துரையாடல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.
இக் கலந்துரையாடலில் மாவட்ட செயலக அதிகாரிகள், பிரதேச சபைகளின் தவிசாளர்கள், செயலாளர் வடமாகாணம் உள்ளூராட்சி ஆணையாளர் பிரதேச செயலாளர்கள், சிரேஷ்ட நில அளவை அத்தியட்சகர் மாவட்ட நில அளவைத்திணைக்களம், உதவி ஆணையாளர் உள்ளூராட்சி உதவி அலுவலகம் கிளிநொச்சி ஆகியோர் உட்பட மாவட்ட செயலக உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.