Kilinochchi NET

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளிற்கு அமைச்சரவை தடை

புர்கா உள்ளிட்ட முகத்தை முழுமையாக மூடும் ஆடைகளை தடை செய்யும் யோசனைக்கு அமைச்சரவை அனுமதியளித்துள்ளது.

இது தொடர்பான யோசனையை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர முன்வைத்திருந்தார். இந்த நிலையிலேயே குறித்த யோசனைக்கு இன்றைய தினம் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

புர்கா உள்ளிட்ட பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் முகத்தை மறைக்கக்கூடிய அனைத்து ஆடைகளுக்கும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

2019ஆம் ஆண்டு ஈஸ்டர் தினத்தில் இலங்கையின் பல பகுதிகளில் இடம்பெற்ற குண்டுத் தாக்கதல் சம்பவத்தை தொடர்ந்து புர்கா அணிந்த நிலையில் சந்தேகநபர்கள் சிலர் கைது செய்யப்பட்டிருந்தனர்.இதனையடுத்தே புர்கா தொடர்பான சர்ச்சைகள் கிளம்பியிருந்தன என்பதும் குறிப்பிடத்தக்கது.