Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலில் இருந்த 47 வயதுடைய பெண் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பில் பரிசோதனைகளிற்காக மாதிரிகள் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை என வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஓமானிலிருந்து நாடு திரும்பிய நிலையில் குறிதத் பெண் இரணைமடு விமானப்படை தனிமைப்படுத்தல் நிலையத்தில் கண்காணிக்கப்பட்டு வந்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த பெண்ணிற்கு ஏற்பட்ட திடீர் நோய் காரணமாக கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளார்.
குறித்த பெண்ணின் உயிரிழப்பு தொடர்பில் கிளிநொச்சியில் பதற்றமான நிலை காணப்பட்டது. இந்த நிலையில் மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், அவர் கொவிட் தொற்றினால் உயிரிழக்கவில்லை எனவும் மரு்ததுவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவிக்கின்றன.
உயிரிழந்த பெண் பாணந்துறை பகுதியைச்சேர்ந்த எம் இசற் எம் எச் பாத்துமா சியான என் 47 வயதுடைய பெண் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்தவரின் சடலம் கிளிநொச்சி வை்ததியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
Prev Post