இலங்கையில் முதன்முறையாக 700,000 வாக்குகள் நிராகரிப்பு! காரணம் என்ன?

இலங்கையில் முதன்முறையாக 700,000 வாக்குகள் நிராகரிப்பு! காரணம் என்ன?

2020 நாடாளுமன்றத் தேர்தலில் 6% க்கும் அதிகமான வாக்குகள் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தேர்தல் வன்முறை கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.

தேர்தலில் பதிவான 12,343,302 வாக்குகளில், 744,373 வாக்குகள் அதாவது 6.03% வாக்குகள் செல்லாது என்று கருதப்பட்டுள்ளன.

இந்த தகவலை தேர்தல் வன்முறையை கண்காணிக்கும் மையம் (CMEV) யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் மஞ்சுளா கஜநாயக்க தெரிவித்தார்.

ஊடகம் ஒன்றுடன் பேசிய அவர், வரலாற்றில் முதல்முறையாக ஒரு தேர்தலில் இவ்வளவு அதிகளவான வாக்குகள் நிராகரிக்கப்பட்டன என்றார்.

வாக்காளர்களுக்கு அறிவு இல்லாததால் அதிக எண்ணிக்கையில் வாக்குச் சீட்டுகள் நிராகரிக்கப்பட்டமைக்கான காரணமாக இருக்கலாம் அல்லது தேர்தலில் போட்டியிட்ட வேட்பாளர்கள் மீது வாக்காளர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர் என்று கஜநாயக்க கருத்து தெரிவித்தார்.

அதிக எண்ணிக்கையிலான அஞ்சல் வாக்குகளும் நிராகரிக்கப்பட்டன என்றும் அவர் தெரிவித்தார்.