Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
இலங்கையின் எந்தவொரு பகுதியிலிருந்தும் நுவரெலியா நகருக்கு செல்வதை பொதுமக்கள் தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுவரெலியாவில் வசந்த கால கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இதன் காரணமாக கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் இருந்து உள்நாட்டு சுற்றுலா பயணிகள் பாரிய அளவில் நுவரெலியாவிற்கு பயணித்துள்ளனர். அவ்வாறு நுவரெலியாவிற்கு பயணித்தவர்கள் மற்றும் நுவரெலியா மாவடத்தை சேர்ந்தவர்களும் நேற்றைய தினம் கோவிட் தொற்றுக்குள்ளாகியுள்ளனர்.
இந்த நிலையில் வார இறுதி நீண்ட விடுமுறையை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்திற்கு வருவதனை முடிந்த அளவு தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. பயணங்களை குறைத்தால் மாத்திரமே கோவிட் பரவலை முடிந்த அளவு கட்டுப்படுத்த முடியும் என நுவரெலியா மாவட்ட கொரோனா தடுப்பு பிரிவின் தலைவரும் நுவரெலியா மாவட்ட செயலாளருமான சந்தன கலபொட தெரிவித்துள்ளார்.
இன்று ஆரம்பமாகும் வார இறுதி விடுமுறையை முன்னிட்டு நேற்றைய தினம் வரையிலும் பாரிய அளவிலான சுற்றுலா பயணிகள் நுவரெலியாவில் உள்ள சுற்றுலா விடுதிகள் மற்றும் ஹோட்டல்களில் அறைகளை ஒதுக்கியுள்ளனர்.
நுவரெலியா நகரத்திலும், வலப்பனை மற்றும் ஹட்டனிலும் இதுவரையில் கொரோனா தொற்றுக்குள்ளான பாரிய மக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். பரவலாக PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.