Kilinochchi NET

இலங்கையர்களுக்கு அவுஸ்திரேலிய அரசாங்கத்தின் ஓர் மகிழ்ச்சியான அறிவிப்பு..!!

ஆஸ்திரேலியாவின் சர்வதேச அபிவிருத்தி உதவித்திட்டத்தின் கீழ் இலங்கையிலுள்ளவர்களுக்கு Australia Awards புலமைப்பரிசில் மற்றும் குறுகிய கால பயிற்சி நெறி உள்ளிட்டவை வழங்கப்படுகின்றன.

குறிப்பாக நீண்ட கால அடிப்படையிலான Australia Awards புலமைப்பரிசில் மற்றும் Business Incubation Management, Multisectoral Approaches to Nutrition and Food Security ஆகிய இலவச கற்கைநெறிகளுக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

Australia Awards புலமைப்பரிசிலுக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ம் திகதிக்கு முன்னதாக விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று Business Incubation Management மற்றும் Multisectoral Approaches to Nutrition and Food Security குறுகியகால கற்கைநெறிகளுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி மே 07 ஆகும்.

இவை குறித்த மேலதிக விபரங்களுக்கும் எவ்வாறு விண்ணப்பிப்பது மற்றும் இதற்கான நிபந்தனைகள் என்னவென்பதை அறிந்துகொள்ள australiaawardssrilanka.org என்ற இணையத்தளத்திற்குச் செல்லுங்கள்.