Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
முல்லைத்தீவு முள்ளியவளை தண்ணீரூற்றுப் பகுதியில் கடந்த 19ஆம் திகதி அன்று இரவு வீதியில் படுகாயமடைந்த நிலையில் இருந்த நபர் ஒருவர் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் பற்றி தெரிய வருகையில், ஹற்றன் டிக்கோயா பகுதியைச் சேர்ந்த 36 அகவையுடைய நல்லு சிவராசா என்பவர் முள்ளியவளை தண்ணீரூற்று முல்லைத்தீவு பகுதிகளில் யாகசம் பெற்று வந்துள்ளார்.
இவர் பல தடவைகள் மது அருந்திய நிலையில் வீதிகளில் விழுந்து காணப்பட்டுள்ளார் என குறித்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் நேற்று தண்ணீரூற்றுப் பகுதியில் வீதியில் காயமடைந்த நிலையில் விழுந்து கிடந்துள்ளார்.
இவரை அவசர நோயாளர்காவு வண்டி மூலம் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
விபத்துக் குறித்து முள்ளியவளை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் இவரது உடலம் முல்லைத்தீவு மாவட்ட மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.