Kilinochchi NET

காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் வவுனியாவில் ஆர்ப்பாட்ட ஊர்வலம்

இலங்கை அரசை படைகளாலும் துணை ஆயுதக்குழுக்களாலும் தாயகத்தில் வலிந்து காணாமால் ஆக்கபட்டோருக்கு நீதி கோரி வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் மாபெரும் ஆர்ப்பாட்ட பேரணி ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

குறித்த ஆர்ப்பாட்டம் இன்று காலை 10.30 மணிக்கு வவுனியா பழைய பேருந்து நிலையத்தின் முன்பதாக ஏ-9வீதியில் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் எட்டு மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், சிவில் அமைப்புக்கள், ஏனைய தனியார் நிறுவனங்கள் என பலரும் பங்கேற்றிருந்தனர்.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விவகாரத்தில் இலங்கை அரசாங்கம் மட்டுமின்றி சர்வதேசத்தினாலும் எந்ததொரு தீர்வும் வழங்கப்படாமல் இழுத்தடிப்பு செய்யப்பட்டு வருகின்றது.

இதேவேளை ஜநா அமர்வு நடைபெறவுள்ள நிலையில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளினால் குறித்த கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.