Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

காணாமல் போண 2 வயதுடைய குழந்தை தன்னிடம் இருப்பதாக பொலிஸாருக்கு வந்த அழைப்பு : பின்னணி என்ன?

நீர்கொழும்பு – தலாஹேன

நீர்கொழும்பு – தலாஹேன பகுதியில் காணாமல்போயிருந்த 2 வயதான குழந்தை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபை தெரிவித்துள்ளது.

குறித்த குழந்தை தமது பொறுப்பில் உள்ளதாக அவரது தந்தை, 1929 என்ற அவசர தொலைபேசி இலக்கத்திற்கு அழைத்து அறிவித்ததாக அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் முதித விதானபதிரன தெரிவித்துள்ளார்.

இந்த குழந்தை கடந்த மார்ச் மாதம் 19ஆம் திகதி காணாமல் போயிருந்ததாக அவரது தாயார் தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபைக்கு அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.