Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கிளிநொச்சி முரசுமோட்டையில்
கிளிநொச்சி – முரசுமோட்டை பகுதியில் ஒரே குடும்பத்தை சேர்ந்த பெண் உட்பட மூன்று பேர் மீது தாக்குதல் மேற்கொண்ட நான்கு சந்தேக நபர்களையும் கடும் நிபந்தனைகளுடன் தலா இரண்டு இலட்சம் பெறுமதியான ஆட்பிணைகளில் செல்லுமாறு நீதிமன்றம் கட்டளையிட்டுள்ளது.
முரசுமோட்டை பகுதியில் கடந்த 13ம் திகதி இரவு கடைக்கு பொருட்களை வாங்கச் சென்ற இரண்டு சகோதரர்கள் மீது மதுபோதையில் இருந்தவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இதனை கேட்பதற்கு சென்ற அவர்களது தாயாரும் தாக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நான்கு சந்தேகநபர்கள் நேற்றைய (16) பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்டிருந்த நால்வரும் இன்று (17) கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றில் பதில் நீதிவான் எஸ். பாலசுப்பிரமணியம் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டிருந்தனர்.
கடந்த 13ம் திகதி காலை வயல் காணி ஒன்றில் ஏற்பட்ட தகராறின் தொடர்ச்சியாகவே இவர்கள் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதாக தெரியவந்துள்ளது.