Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
யாழ்-கொழும்பு நெடுஞ்சாலை
வடக்கு அதிவேக நெடுஞ்சாலையின் கட்டுமானப் பணிகள் ஆரம்பமாகி வேகமாக நடைபெற்று வரும் நிலையில் முதல் கட்டமாக கொழும்பு- குருநாகல் வரையிலான அதிவேக வீதியின் கட்டுமானப் பணிகள் விரைவில் முடிவடையும் தறுவாயில் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த அதிவேக நெடுஞ்சாலை யாழ்ப்பாணம் வரைக்கும் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டவுடன் இலங்கையின் வடபகுதி தலைநகரான யாழிலிருந்து இலங்கையின் தலைநகர் கொழும்பிற்கு வெறும் நான்கு மணித்தியாலங்களில் சென்று விடலாம் என்பது அனைவருக்கும் மகிழ்ச்சியான செய்தியே.
ஆனால், இதற்கு இன்னும் சிறிது காலம் பொறுமையுடன் காத்திருக்கவேண்டும். வெளிநாடுகளிலிருந்து தமது உறவுகளைப் பார்ப்பதற்கு வருகை தரும் எமது உறவுகளும் கொழும்பிலிருந்து அடிக்கடி யாழ் வந்து செல்லும் அனைத்து மக்களுக்கும் இவ் அதிவேக வீதி மிகப் பெரும் வரப்பிரசாதமாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.