Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பணத்தினை உங்கள் பக்கம் ஈர்க்க இந்த ரகசியங்கள் பின்பற்றினாலே போதுமாம் ! நீங்கள் பணக்காரர் தான்
இன்று பலர் பணப்பிரச்சினையால் சிக்கித்தவித்து வருகின்றனர். பணமில்லாமல் இந்த உலகில் எந்தவொரு அணுவும் அசையாது என்பதே தற்போதைய நிதர்சனம்.
நம் வீட்டில் அதிகம் பணப்பிரச்சினை ஏற்பட்டால் அதற்கு சில வழிமுறைகளை தினசரி முறையாக பின்பற்றி வந்தால் நல்ல தீர்வைக் காணலாம்.
இலவங்கப்பட்டையை பொடி செய்து சிறிது எடுத்து ஒரு பச்சை நிற துணியில் மடித்து பச்சை நூலால் கட்டி மணிபர்சிலோ அல்லது சட்டைப்பையிலோ எப்பொழுதும் வைத்துக்கொள்ளவும்.
தினமும் ஏதேனும் ஒரு நாணயத்தை இரண்டு கைகளிலும் பிடித்தபடி உங்கள் தேவையினை மனமார வேண்டி – அந்த காசுகளை சேமித்து வந்து மாதக்கடைசியில் சேமித்த பணத்தில் வாழைப்பழம் வாங்கி பாசுமாட்டிற்கு தானமாக வழங்கவும்.
முக்கியமான காரியங்கள், பணசம்பந்தமான விஷயங்களுக்கு செல்லும்போது எலுமிச்சம் பழம் ஒன்றை “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் சக்தியே அருள்வாய் போற்றி ஓம்” என ஆறு முறை உச்சரித்து உடன் வைத்துக்கொள்ளவும்.
மாதச்சம்பளமாகட்டும், சுயத்தொழில், வியாபாரம் செய்பவர்கள் யாராகினும் வருவாயில் முதல் செலவாக உப்பு, மல்லிகைபூ இரண்டையும் வாங்குவதே முதல் செலவாக இருக்க வேண்டும்.
பணப்பெட்டி தென்மேற்கு மூலையில் இருக்கவேண்டும், அதில் எப்போதும் மல்லிகைபூ போட்டு வைக்கவேண்டும். பணப்பெட்டியில் பெரிய தொகைகளை வைக்கும்போது ஆறு வெற்றிலைகள், முன்று பாக்குகள் சேர்த்து வைக்கவும்.
மகாலக்ஷ்மி படத்திற்கு தினமும் காலை, மாலை நெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் ஏதாவதொன்றில் இரண்டு திரி போட்டு விளக்கு ஏற்றி வீடு, கடை முழுவதும் சாம்பிராணி புகை காட்டிவருவது பண விஷயத்தில் மிகசிறந்த வசியமாகும்.