Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
கொய்யாப் பழத்தில் வைட்டமின் சி, வைட்டமின் பி, கால்சியம், மாக்னிஷியம், பாஸ்பரஸ், இரும்பு ஆகிய சத்துக்கள் நிறைந்துள்ளன. இதில் இரண்டு வகைகள் உள்ளது.
அவை தான் சிவப்பு மற்றும் வெள்ளை நிறமுள்ள கொய்யா பழங்கள். இவை இரண்டுமே மருத்துவத்தில் பெரிதும் உதவியாக இருக்கின்றது.
இதனை பழங்களின் ராணி என்று அழைக்கப்படுகின்றது. இதில் எண்ணற்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளது. இது சக்கரைநோய் முதல் புற்றுநோய் வரை பல நோய்களுக்கு தீர்வாக அமைகின்றது.
தற்போது அவை என்னென்ன என்பதை பார்ப்போம்.
வைட்டமின் சி நமது நோய் எதிர்ப்பு சக்தியை வலிமைப்படுத்த கொய்யாப்பழம் உதவி செய்கிறது.
ஏனெனில் அதில் வைட்டமின் சி அதிகளவில் நிறைந்துள்ளது. கொய்யாப்பழம் அரணாக நின்று தொற்றுகள் மற்றும் நோய்க் கிருமிகளிடமிருந்து நம்மை காக்கிறது.
கொய்யாப்பழத்தில் அதிக அளவிலான லைகோபீன் (lycopene) உள்ளது. இது சக்தி வாய்ந்த ஆன்டி ஆக்ஸிடன்ட் ஆகும்.
இது புற்றுநோய் செல்களை நடுநிலைப்படுத்தி புற்றுநோய் செல்களின் எண்ணிக்கையை குறைக்கிறது. இதன் சாறு புற்றுநோய் செல்கள் வளராமல் தடுக்கிறது.
கொய்யாப்பழம் குறைவான சர்க்கரை உயர்த்தல் குறியீடு கொண்ட பழம் என்பதால் அது ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் தடுக்கிறது.
மேலும் அதிக நார்ச்சத்தும் உள்ளதால் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு உயராமல் பராமரிக்கிறது. கொய்யாப்பழத்தில் அதிக அளவில் சோடியம் மற்றும் பொட்டாசியம் உள்ளது.
இது ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்க உதவுகிறது. எனவே உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு இது பேருதவி புரிகிறது.
மேலும் இதிலுள்ள நல்ல கொழுப்பு எந்தவித இதய நோய்களும் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஒரு வேலைப்பளு மிகுந்த நாளின் முடிவில் உங்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை கொய்யாப்பழம் நீக்குகிறது.
இதிலுள்ள மேக்னீசியம் தசைகளின் இறுக்கத்தை தளர்த்தி அதை அமைதிப்படுத்துகிறது. பெண்கள் கர்ப்ப காலத்தின் போது கொய்யாப்பழத்தை அவசியம் உட்கொள்ளுவது நல்லது.
ஏனெனில் இதில் இருக்கும் ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின் பி9 குழந்தையின் நரம்பு மண்டல வளர்ச்சிக்கு வழிவகுக்கிறது. இது குழந்தைக்கு நரம்பியல் கோளாறுகள் ஏற்படாதவாறு தடுக்கிறது.
கொய்யாப்பழம் குறைவான கலோரிகள் கொண்ட பழம் மற்றும் நிறைய நார்ச்சத்து உள்ள பழமும் கூட. எனவே இதை சாப்பிடுவதால் நீண்ட நேரத்திற்கு பசிக்காது.
மேலும் நமது உடலின் வளர்சிதை மாற்றத்தையும் (metabolism) மேம்படுத்துகிறது.