Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
பொதுவாக இன்றைய கால இளம்பெண்கள் அழகு பராமரிப்பில் அதிக முக்கியத்துவம் கொடுப்பது கூந்தல் பராமரிப்புக்குத்தான். முடி உதிர்வு, முடி வளர்ச்சியின்மை,அடர்த்தி குறைவு, இளநரை, வறட்சியான முடி, நுனி வெடிப்பு என்று பல பிரச்சனைகள் நாளுக்கு நாள் சந்தித்து கொண்டு வருகின்றார்கள்.
ஒருவரது உடலுக்கு போதுமான ஊட்டச்சத்து கிடைக்காமல் போனால், அது உடலுறுப்புக்களின் செயல்பாட்டைப் பாதித்து ஆரோக்கியத்தைக் கெடுப்பதோடு, தலைமுடியின் ஆரோக்கியத்தையும் கெடுத்து, தலைமுடியை அதிகம் உதிர வைத்து எலிவால் போன்று மாற்றிவிடுகின்றது. ஆரம்பத்திலேயே தலைமுடி உதிர்விற்கு தீர்வு காண முயற்சித்தால், முடி எலி வால் போன்று அசிங்கமாக காட்சியளிப்பதைத் தடுக்கலாம்.
அந்தவகையில் தற்போது முடி எலி வால் தலைமுடியை எப்படி அடர்த்தியாக வளர செய்யலாம் என தற்போது இங்கு பார்ப்போம். ஒரு கப் தேங்காய் பாலை வெதுவெதுப்பாக சூடேற்றி ஸ்கால்ப் மற்றும் தலைமுடியில் தடவி மென்மையாக மசாஜ் செய்யுங்கள். இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் தலைக்கு குளியுங்கள்.
இப்படி வாரத்திற்கு 2 முறை செய்தால், தலைமுடிக்கு தேவையான சத்து கிடைத்து முடி நன்கு அடர்த்தியாக வளரும். முக்கியமாக தேங்காய் பாலை அதிகமாக சூடேற்றிவிட வேண்டாம். 1 டேபிள் ஸ்பூன் நெல்லிக்காய் சாறு, 1 டேபிள் ஸ்பூன் சீகைக்காய் பவுடர் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய் ஆகியவற்றை ஒன்றாக கலந்து, ஸ்கால்ப்பில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து, 2 மணிநேரம் ஊற வைத்து அலச வேண்டும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வர நல்ல பலன் கிடைக்கும்.
முட்டையின் வெள்ளைக்கருவை உடைத்து ஊற்றி நன்கு அடித்து பின் அதில் மயோனைஸை சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் தடவி குறைந்தது 30 நிமிடம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலசவும். இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்ய முடிக்கு தேவையான புரோட்டீன் கிடைத்து, முடி அடர்த்தியாக வளரும்.
1 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு, 1 டேபிள் ஸ்பூன் தேன் மற்றும் 2 டேபிள் ஸ்பூன் தயிர் மூன்றையும் ஒரு பௌலில் எடுத்து ஒன்றாக கலந்து, தலைமுடியின் வேரில் இருந்து முடியின் முனை வரை தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலசுங்கள். இந்த ஹேர் பேக்கை வாரம் ஒருமுறை பயன்படுத்தினால், முடி அடர்த்தியாக வளர்வதோடு, பொலிவோடும் காணப்படும். தயிர், மில்க் க்ரீம் மற்றும் முட்டையை ஒன்றாக கலந்து பின் அதை ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 1 மணிநேரம் ஊற வைத்து, பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
வறட்சியான முடியைக் கொண்டவர்கள் இப்படி வாரத்திற்கு 2 முறை செய்யவும். அதுவே எண்ணெய் பசை முடியைக் கொண்டவர்கள் வாரத்திற்கு ஒருமுறை பயன்படுத்தவும். சிறிது ஆலிவ் ஆயிலை சூடேற்றி, அதில் நற்பதமான கற்றாழை ஜெல்லை சேர்த்து கலந்து, அந்த கலவையை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி தடவி சிறிது மசாஜ் செய்து, 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரால் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும்.
100 கிராம் கடலை மாவு 1/2 கப் நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, தலைமுடியின் வேர் பகுதியில் தடவி 30 நிமிடம் அல்லது நன்கு காயும் வரை ஊற வைக்கவும். பின் குளிர்ந்த நீரால் தலைமுடியை அலசவும். ஒரு பெரிய வெங்காயத்தை அரைத்து சாறு எடுத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் தேங்காய் எண்ணெய், 1/2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் 1 டேபிள் ஸ்பூன் தேன் சேர்த்து கலந்து, ஸ்கால்ப்பில் படும்படி நன்கு தடவி, 1/2 மணிநேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலைமுடியை அலச வேண்டும்.
இப்படி மாதத்திற்கு 3 முறை பயன்படுத்தினால், தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்வதைக் காணலாம். 100 கிராம் முல்தானி மெட்டியை வெதுவெதுப்பான நீர் சேர்த்து பேஸ்ட் செய்து, அதை ஸ்கால்ப்பில் படும்படி தடவ வேண்டும். குளிர்காலத்தில் பயன்படுத்தினால், 5 நிமிடம் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரால் முடியை அலச வேண்டும். அதுவே கோடைக்காலத்தில் பயன்படுத்தினால், 10 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரால் தலைமுடியை அலச வேண்டும்.