Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சி – வட்டக்கச்சி மேய்ச்சல் தரை இன்மையால் வட்டக்கச்சி கால்நடை வளர்ப்பாளர்கள் அவதி!

கிளிநொச்சி – வட்டக்கச்சி, கட்சன் வீதி கிராம மக்கள் மேய்ச்சல் தரை இன்மையால் அவதியுற்று வருவதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.

நீண்ட காலமாக தமக்கான மேய்ச்சல் தரை இல்லாமையால் தமது கால்நடைகள் பாரியளவில் அழிவடைந்து வருவதாக அவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

மேலும் தமக்கு இலங்கை அரசினால் வாழ்வாதாரத்துக்காக கால்நடைகள் வழங்கப்பட்டுள்ள நிலையிலும் மேய்ச்சல் தரை இல்லாததால் அவதியுற்று வருவதாகவும் தெரிவிக்கின்றனர்.