Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
தமிழீழம் அமைவதற்கான பொதுவாக்கெடுப்பு நடத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது உட்பட 55 வாக்குறுதிகளுடன் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. தமிழக சட்டபேரவை தேர்தலை முன்னிட்டு அதிமுக, திமுக, அமமுக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கையை வெளியிட்ட நிலையில், தேர்தல் பிரச்சாரத்திலும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், திமுக கூட்டணி கட்சியான மதிமுக தற்போது தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளது. இந்த தேர்தல் அறிக்கையை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ளார்.
இந்த தேர்தல் அறிக்கையில் 55 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
1. மாநில உரிமையை பாதுகாக்க குரல் கொடுப்போம்,
2. மதசார்பின்மையை பேணுவோம்,
3. சமூக நீதியை பாதுகாப்போம்,
4. இந்தி, சமஸ்கிருதம் மொழி திணிப்பை எதிர்ப்போம்,
5. வேளாண்மையை பாதுகாப்போம்,
6. விளைநிலங்களை பாதிக்கும் திட்டங்கள் தடுத்து நிறுத்தப்படும்,
7. நில அளவை சீரமைக்கப்படும்,
8. பாசனம், நீர் மேலாண்மை உறுதிப்படுத்தப்படும்,
9. நதிநீர் இணைப்பு திட்டங்கள் நிறைவேற்றப்படும்,
10. ஆற்றுநீர் பங்கீட்டு சிக்கல்கள் நீக்கப்படும்,
11. தொழில்துறை பாதுகாக்கப்படும்,
12. பொதுத்துறை காக்கப்படும்,
13. மின்சார விநியோகம் சீரமைக்கப்படும்.
14. தொழிலாளர் நலன் பாதுகாக்கப்படும்,
15. ஆசிரியர், அரசு ஊழியர்கள் நலன் காக்கப்படும்.
16. போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை நிறைவேற்றப்படும்,
17. தொழிலாளர் ஈட்டுறுதிக்கழகம் அமைக்கப்படும்,
18. ஊழல் ஒழிக்கப்படும்,
19. ஊராட்சி மன்றங்களுக்கு அதிகாரம் வழங்கப்படும்,
20. முழு மதுவிலக்கு கொண்டு வரப்படும்,
21. மக்கள் நல்வாழ்வுக்கு உறுதி அளிக்கப்படும்.
22. மகளிர், குழந்தைகள் நலன் காக்கப்படும்,
23. பிற்படுத்தப்பட்டோர் நலன் காக்கப்படும்,
24. பட்டியலின பழங்குடியினர் நலன் உறுதிப்படுத்தப்படும்,
25. சிறுபான்மையினர் நலன் பேணப்படும்,
26. இளைஞர் மாணவர் நலன் பாதுகாக்கப்படும்,
27. மீனவர் நலன் காக்கப்படும்.
28. மாற்றுத்திறனாளிகள் நலன்,
29. வணிகர் நலன்,
30. ஊடகத்துறை நலன்,
31. மனித உரிமைகள் காக்கப்படும்.
32. கொடுங்கோன்மை சட்டங்களை எதிர்ப்போம்,
33. ஈழத்தமிழர் இனப்படு கொலைக்கு நீதி பெறுவோம்,
34. தமிழ் ஈழம் மலர பொது வாக்கெடுப்பு நடத்த வற்புறுத்துவோம்,
35. தமிழை ஆட்சி மொழியாக்க வற்புறுத்துவோம்,
36. கல்வி,
37. தமிழக ரெயில்திட்டங்கள்,
38. விமான நிலையங்கள் மேம்பாடு ஆகியவை வற்புறுத்தப்படும்.
39. மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
40. ஸ்டெர்லைட் ஆலை திறக்க எதிர்ப்பு தெரிவிக்கப்படும்.
41. நியூட்ரினோ திட்டத்தை தொடர்ந்து எதிர்ப்போம்,
42. சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படும்,
43. சீமைக் கருவேல மரங்கள் அழிக்கப்படும்,
44. கால நிலை சட்டம் இயற்ற வலியுறுத்துவோம்,
45. மணல் கொள்ளையை தடுப்போம்,
46. கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு தொடரும்,
47. காட்டுப்பள்ளி துறைமுகம்,
48. பள்ளிக்கரணை சதுப்பு நிலம் காக்கப்படும்,
49. தொல்லியல் ஆய்வு நடைபெறும்,
50. தேர்தல் சீர்திருத்தம் கொண்டு வரப்படும்,
51. சுற்றுலா வளர்ச்சி மேம்படுத்தப்படும்,
52. சட்டம் நீதித்துறை சீரமைக்கப்படும்,
53. வெளிநாட்டு தமிழர் பிரச்சினைகள் தீர்க்கப்படும்,
54. ஏழு தமிழர்கள் விடுதலைக்காக பாடுபடுவோம்,
55. அடக்குமுறை எதிர்க்க அணி திரள்வோம்
Prev Post