Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Phone :
+94 76 34 45678
Email :
kilinochchinetnews@gmail.com
Web : Vanninetwork.com
Recover your password.
A password will be e-mailed to you.
சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் வீ ஃபெங் (Wei Fenghe) இந்த மாத இறுதியில் இலங்கைக்கு வரவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதன்போது அவர் இலங்கை அரசாங்கத் தலைவர்கள் மற்றும் அதிகாரிகளுடன் இருதரப்பு கலந்துரையாடல்களை மேற்கொள்வார் என தெரியவருகிறது.
ராஜபக்ஷர்களின் அரசாங்கம் பதவியேற்றதிலிருந்து சீன உயர் அரசாங்க அதிகாரி மேற்கொள்ளும் மிக உயர்ந்த மட்ட பயணங்களில் இதுவும் ஒன்றாகும்.
வெளியுறவு அமைச்சகத்தின் தகவல்படி ஜெனரல் வீ வருகையின் இறுதி திகதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.
எனினும் தமிழ் சிங்கள புத்தாண்டுக்குப் பின்னர் அந்த விஜயம் நடைபெறுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதற்கிடையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பீய்ஜிங்கிற்கான செல்வதற்கான திகதிகள் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பெரும்பாலும் இந்த விஜயம் அடுத்த மாதத்தில் நடைபெறக்கூடும் என்று ஆங்கில செய்தித்தாள் ஒன்று தெரிவித்துள்ளது.