தேர்தலின் முன்னர் சஜித் கைது?

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவை பொதுத்தேர்தலுக்கு முன்னதாக கைது செய்ய முயற்சிகள் இடம்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதனைக் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் முன்னாள் பெப்ரல் அமைப்பின் நிறைவேற்றுப் பணிப்பாளருமான கீர்த்தி தென்னக்கோன் கூறியுள்ளார்.

மத்திய கலாசார நிதியத்தின் 1100 கோடி ரூபாவை சஜித் பிரேமதாச மோசடி செய்துள்ளதாக எழுந்த குற்றச்சாட்டுக்கு மத்தியில் அவரைக் கைது செய்யும் சூழ்ச்சி இடம்பெற்று வருகின்றதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.