லங்காபுர பகுதியில் மேலும் 350 பேருக்கு PCR பரிசோதனை!

பொலன்னறுவை – லங்காபுர பகுதியில் மேலும் 350 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு சுகாதார அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்ட நிர்வாக பொது சுகாதார ஆய்வாளர் ஜயந்த சந்திரசிறி இதனை தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கூறியுள்ள அவர்,

“லங்காபுர பகுதியில் தெரிவு செய்யப்பட்ட 350 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்வதற்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அந்த பரிசோதனை முடிவுகள் இன்று பெற்றுக்கொள்ள முடியும்.

அண்மையில் லங்காபுர பிரதேச செயலகத்தின் அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதை அடுத்து, அந்த பகுதியில் உள்ள தெரிவு செய்யப்பட்ட 350 பேருக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக” அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, அநுராதபுரம் சிறைச்சாலையில் தெரிவு செய்யப்பட்ட கைதிகளுக்கும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.