கிளிநொச்சி பொலிஸாரினால் 24 மணிநேரத்தில் 8 நபர்கள் கைது : காரணம் என்ன?
Share
கிளிநொச்சி பொலிஸாரினால் 24 மணிநேரத்தில் 8 நபர்கள் கைது : காரணம் என்ன?
கிளிநொச்சி மாவட்டத்துக்குட்பட்ட பகுதிகளில் இரு வேறு குற்றச்சாட்டுக்களில் 8 பேர் இன்று கைதுசெய்யப்பட்டனர் என பொலிஸார் தெரிவித்தனர்.
கிளிநொச்சி, தருமபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புன்னைநீராவி பகுதியில் சட்டவிரோத கசிப்பு உற்பத்தியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஒருவரும், குமாரசாமிபுரம் பகுதியில் கசிப்பு வைத்திருந்த குற்றச்சாட்டில் இருவரும் கைதுசெய்யப்பட்டனர்.
அத்தோடு புளியப்பொக்கணை, கல்லாறு, பிரமந்தனாறு பகுதிகளில் அனுமதிப்பத்திரத்துக்கு முரணான வகையில் டிப்பரில் மணல் ஏற்றிய குற்றச்சாட்டில் 6 சாரதிகளும் தருமபுரம் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கைதுசெய்யப்பட்டனர்.
இந்நிலையில் கைது செய்யப்பட்டவர்கள் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.