கிளிநொச்சி பூநகரி பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
Share
கிளிநொச்சி பூநகரி பகுதியில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது
பூநகரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பரமன்கிராய் வெட்டக்காடு பகுதியில், உள்ளூர் துப்பாக்கியுடன் நேற்றிரவு (08) ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பூநகரி பொலிஸ் விசேட குற்றத் தடுப்புப் பிரிவுக்குக் கிடைத்த தகவலுக்கமைவாக மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போதே, சந்தேகநபரிடமிருந்து துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளது.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பூநகரி பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.