Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் பொத்துவில் – பொலிகண்டி மாபெரும் பேரணி

கிளிநொச்சியில் வரலாறு காணாத மக்கள் வெள்ளத்துடன் பொத்துவில் – பொலிகண்டி மாபெரும் பேரணி

தமிழ் பேசும் சமூகங்களுக்கு எதிரான அடக்கு முறைகளை எதிர்த்தும், கண்டித்தும் தாயகத்தில் பேரெழுச்சியுடன் பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தமிழ் சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் தமிழ் பேசும் மக்களின் ஆதரவுடன் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த போராட்டமானது இன்றைய தினம் யாழ்ப்பாணத்தை அடைந்து பெரும் எழுச்சியுடன் முடிவிற்கு வரவுள்ளது.

இந்த நிலையில் பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான ஐந்தாம் நாள் மாபெரும் கவனயீர்ப்பு பேரணியானது வரலாறு காணத மக்கள் வெள்ளத்துடன் இன்றைய தினம் கிளிநொச்சியில் ஆரம்பமாகியுள்ளது.

பேரணியானது பொத்துவில் முதல் பொலிகண்டி வரை எமது தேசம், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதி வேண்டும் போன்ற விண்ணதிரும் கோசங்கள் முழங்க பெருந்திரளான மக்களோடு பரந்தன் நோக்கி நகர்கின்றது.

வடக்கு, கிழக்கு உள்ளிட்ட 8 மாவட்டங்களிலும் உரிமைக்கான போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் திரண்டு பேராதரவை வழங்கி வருகின்றனர்.

இதுவரை 7 மாவட்டங்களை கடந்து தற்போது யாழ். மண்ணை அடைவதற்கான எழுச்சி பயணம் தொடர்ந்த வண்ணமுள்ளது.