கிளிநொச்சியில்பெருமளவு மக்கள் வெள்ளத்துடன் நிறைவடைந்தது பொத்துவில் – பொலிகண்டி பேரணியின் நான்காம் நாள்
Share
கிளிநொச்சியில்பெருமளவு மக்கள் வெள்ளத்துடன் நிறைவடைந்தது பொத்துவில் – பொலிகண்டி பேரணியின் நான்காம் நாள்
கிளிநொச்சி – கரடிப்போக்குச் சந்தியில் பொத்துவில் – பொலிகண்டி பேரணியின் நான்காம் நாள் நிகழ்வுகள் நிறைவடைந்துள்ளன.
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையான பேரெழுச்சிப் பேரணி மன்னாரில் இருந்து கிளிநொச்சி நகரை அடைந்து, கிளிநொச்சி – கரடிப்போக்குச் சந்தியில் இன்றைய நாளுக்கான நிகழ்வுகள் அனைத்தும் நிறைவுபெற்றுள்ளன.
பேரெழுச்சிப் பேரணியின் நான்காம் நாளான இன்று வவுனியாவில் இருந்து காலையில் ஆரம்பிக்கப்பட்ட பேரணி, கொறவப் பொத்தான வீதி ஊடாக மன்னார் மாவட்டத்துக்குச் சென்றிருந்தது.
அங்கு ஆயிரக்காணக்கானோரின் ஆதரவுடன் தொடர்ந்த பேரணி வெள்ளாங்குளம் ஊடாக மல்லாவி நகருக்குச் சென்று அங்கிருந்து தற்போது கிளிநொச்சி நகரை அடைந்துள்ளது.