கிளிநொச்சியில் சிறுவர் பா துகாப்பு தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுப்பு

தேசத்தின் நம்பிக்கை சிறுவர் கழகம் மற்றும் கிளிநொச்சி பொலிஸார் இணைந்து சிறுவர் பா துகாப்பு தொடர்பான விசேட விழிப்புணர்வு செயற்திட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

குறித்த நிகழ்வு இன்று கிளிநொச்சி , பொன்னகர் பகுதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது சிறுவர் பாதுகாப்பு தொடர்பான துண்டு பி ரசுரங்கள் விநியோகிக்கப்பட்டதுடன், விழிப்புணர்வூட்டும் வகையிலான கருத்துக்களும் இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுவர் து ஷ்பிர யோகத்தை முழுமையாக இ ல்லாதொழிப்போம் எனும் கருப்பொருளில் குறித்த விழிப்புணர்வு செயற்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.