கிளிநொச்சியில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 166 பேர் வீடுகளுக்கு அனுப்பிவைப்பு!

கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் தனிமைப்படுத்தலை நிறைவு செய்த 166பேர் அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்

அன்மையில், ஜோர்தான் நாட்டில் தங்கியிருந்த நிலையில் இலங்கைக்கு அழைத்துவரப்பட்டு கிளிநொச்சி இயக்கச்சியில் அமைந்துள்ள தனிமைப்படுத்தல் நிலையத்தில் ப ரிசோ தனைகளுக்கு உட்படுத்தி தனிமைப்படுத்தலை நிறைவு செய்த இவர்கள் இன்று ( வெள்ளிக்கிழமை)அவர்களது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.

நிறுத்திவைக்கப்பட்டிருந்த வெளிநாடுகளில் நிர்க்கதிக்குள்ளாகியுள்ள இலங்கையர்களை அழைத்துவரும் நடவடிக்கை மீண்டும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.