Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

எமது நாட்டிற்கு இந்த பட்டியலின் தாழ்வுநிலையா? எத்தினையாவது இடம் தெரியுமா?

எமது நாட்டிற்கு இந்த பட்டியலின் தாழ்வுநிலையா? எத்தினையாவது இடம் தெரியுமா?

ஊழல் நிறைந்த நாடுகள் பட்டியலில் இலங்கை 94ஆவது இடத்தை பிடித்துள்ளது.

ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் எனும் சர்வதேச கண்காணிப்பு அமைப்பு (ஊழல் உணர்வுக் குறியீடு – 2020) 2020ஆம் ஆண்டின் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை நேற்று வெளியிட்டது.

இக்கணக்கெடுப்பில் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட 180 நாடுகளில் இலங்கையானது 38/100 புள்ளிகள் பெற்று 94ஆம் இடத்தைப் பிடித்துள்ளது.

இதன்படி டென்மார்க், நியூசிலாந்து ஆகிய நாடுகள் மிகக்குறைந்த ஊழலுள்ள நாடுகளாக 88 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளன.

அதேவேளை சிரியா, சோமாலியா, தென் சூடான் ஆகியன முறையே 14,12 மற்றும் 12 புள்ளிகளுடன் கடைசியாக இடம்பெற்றுள்ளன.

கடந்த சில ஆண்டுகளாக இலங்கையின் புள்ளி நிலையானதாக இருந்தாலும் 2018ஆம் ஆண்டில் 89ஆவது இடத்திலிருந்து இவ்வருடம் கீழிறங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.