துணுக்காய் – கல்விளான் பகுதியில், இன்று (24) அதிகாலை, சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கியுடன், 50 வயது நபர் ஒருவர் கை.துசெய்யப்பட்டுள்ளார்.
மல்லாவி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து, அப்பகுதிக்கு விரைந்த பொலிஸார், அப்பகுதியில் உள்ள வீட்டுக்கு அருகில் உள்ள பற்றைக்காட்டு ஒன்றில் மறைத்து வைக்கப்பட்ட நிலையில், சட்டவிரோத நாட்டுத்துப்பாக்கி ஒன்றை மீட்கப்பட்டனர்.
இதை அடுத்து அருகில் உள்ள வீட்டின் உரிமையாளரை பொலிஸார் கை.துசெய்தனர்.
இவ்வாறு கை.துசெய்யப்பட்ட நபர்,நாளை (25) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாகவும், பொலிஸார் கூறினர்.