53 கிலோ கேரள கஞ்சா அதிரடிப்படையினரால் மீட்பு On Jan 25, 2021 Share முல்லைத்தீவு – சாலை கடற்கரையில் இருந்து, நேற்று (23) மாலை, 53 கிலோகிராம் கேரளா கஞ்சா பொதிகளை, விசேட அதிரடிப்படையினர் மீட்டுள்ளனர். இந்த கேரளகஞ்சா பொதிகள், படகு மூலம் இந்தியாவில் இருந்துகொண்டு வரப்பட்டு, சாலை கடற்கரைப் பகுதியில் இறக்கப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளன. இச்சம்பவத்தை அடுத்து, சந்தேகநபர்கள் அங்கிருந்து தப்பிஓடியுள்ளனர். மீட்கப்பட்ட கஞ்சா பொதிகள், நாளை (25) நீதிமன்றத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் கூறினர். Share