கிளிநொச்சி மாவட்டத்தில், சிவில் பாதுகாப்பு திணைக்களம், மிதிவெடி அகற்றும் நிறுவனங்கள், ஆடைத் தொழிற்சாலைகளில் பணியாற்றுகின்ற பெற்றோர்களின் பிள்ளைகள் கூடுதலாக காலை உணவை அருந்துவதில்லை என்ற முதலாவது புள்ளிவிவரம், பாடசாலைகளிலும் வைத்தியசாலைகளிலும் வெளியாகி வருகின்றன.
இவ்வாறு பாடசாலைக்கு வருகின்ற மாணவர்கள் மயங்கி விழுந்து, வைத்தியசாலையில் அனுமதிக்கப்படுகின்றனர்.
கிளிநொச்சி மாவட்டத்திலே கூடுதலான குடும்பங்கள் தாய் தந்தை இருவரும் அதிகாலையில் வேலைக்குச் செல்வதன் காரணமாக, பிள்ளைகளின் உணவுத் தேவைகள் கவனிக்கப்படுவதில்லை.
குடும்ப வறுமையும் பல மாணவர்கள் வீடுகளில் காலை உணவு அருந்தாமலே பாடசாலைக்கு வருகின்றனர்.
இவ்வாறு பாடசாலைகளுக்கு வருகின்ற மாணவர்கள் மைதானத்தில் ஓடுதல், சிறு சிரமதானப் பணிகளில் ஈடுபடும் போது, மயங்கி விழுகின்றனர்.