கிளிநொச்சி கொமர்ஷல் வங்கியின் இவ்வாண்டிற்கான முதலாவது சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்கான ஊக்குவிப்பு கடன் வழங்கி வைப்பு
Share
கொமர்ஷல் வங்கியின் கிளிநொச்சி கிளையினால் 21.01.2021 அன்று இவ்வாண்டிற்கான முதலாவது “சிறிய மற்றும் நடுத்தர தொழில் முயற்சிக்கான” (SME) ஊக்குவிப்பு கடன் வைபவ ரீதியாக வழங்கி வைக்கப்பட்டது.
இவ்விழாவில் வங்கியின் வடபிராந்திய SME முகாமையாளர் திரு.கங்காதரன் மற்றும் வங்கி கிளை முகாமையாளர் திரு.சஞ்சீவ் மற்றும் வங்கி ஊழியர்கள் கலந்து கொண்டனர்.
தன்போன்ற வளர்ந்து வரும் SME முயற்சியாளர்கட்கு கொமர்ஷல் வங்கியின் இதுபோன்ற பங்களிப்புகள் மிகவும் பயனுள்ளதாக அமைவதாகவும்.
தன்னை BIZ CLUB வாடிக்கையாளராக தெரிவு செய்ததற்காகவும் வாடிக்கையாளர் திரு.டிலக்ஸன் அவர்கள் தனது நன்றிகளை தெரிவித்தார்.
மேலும் இது போன்ற செயற்பாடுகளில் கொமர்ஷல் வங்கி முன்மாதிரியாக செயற்படுவதாயும் வாடிக்கையாளர்கள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.