Kilinochchi NET
Kilinochchi | Kilinochchi net | Kilinochchi news | Vavuniya news | Mannar news | Sri Lanka News | World News | Sports News | Cinema News | Technology News | Education | Entertainment |

கிளிநொச்சியையும் முல்லைத்தீவையும் இணைக்க திட்டம்: மக்கள் எ.தி.ர்.ப்.பு..

கிளிநொச்சி – சாந்தபுரம் கிராமத்தினை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சிக்கு மக்கள் எ.தி.ர்.ப்.பு வெளியிட்டுள்ளனர்.

கரைச்சி பிரதேச செயலக பிரிவுக்குள் வரும் சாந்தபுரம் கிராமத்தில் காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் பிரதேச செயலக பிரிவுகளில் இருந்து வருகை தந்த அதிகாரிகளை, பதிவுகள் மேற்கொள்ள விடாது எ.தி.ர்.ப்.பு.த் தெரிவித்து, மக்கள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

கடந்த வாரம் ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகளால் சாந்தபுரம் கிராமத்தின் பல பகுதிகள் படம் பிடிக்கப்பட்டிருந்தன. அதனை தொடர்ந்து இன்று (15) காணி ஆவணங்கள் வழங்குவதற்கான பதிவுகளை மேற்கொள்ள ஒட்டுசுட்டான் பிரதேச செயலக அதிகாரிகள் சாந்தபுரம் கிராமத்தின் பொது நோக்கு மண்டபத்திற்கு வருகை தந்து, மக்களையும் அழைத்திருந்தனர் .

இதன்போது மக்கள் தங்களது க.டு.ம் எ.தி.ர்.ப்.பி.னை தெரிவித்திருந்தனர். கிராமம் உருவாக்கப்பட்டு இன்று வரை கல்வி, சுகாதாரம் மற்றும் பிரதேச செயலகம், மாவட்டச் செயலகம், பிரதேச சபை என அனைத்து நடவடிக்கைகளும் கிளிநொச்சி மாவட்டத்துடன் இருந்து வந்தது என மக்கள் சுட்டிக்காட்டினர்.

மேலும், கடந்த காலத்தில் காணி அனுமதி பத்திரம் கூட கிளிநொச்சி கரைச்சி பிரதேச செயலகத்தால் வழங்கப்பட்டிருந்தது. ஆனால் தற்போது காணிகளை ஒட்டுசுட்டான் பிரதேசத்திற்குள் கொண்டு செல்வது பொருத்தமற்றது எனவும் மக்கள் கூறியுள்ளனர்.

சாந்தபுரம் கிராமத்தை பொறுத்தவரை அனைத்து நடவடிக்கைகளுக்கும் கிளிநொச்சி மாவட்டமே அருகில் இருக்கிறது. எனவே எம்மை முல்லைத்தீவுக்குள் இணைக்கும் முயற்சி பொருத்தமற்றது. நாம் அதற்கு ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.