கிளிநொச்சியில் தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி பிரார்த்தனை

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, இன்று வியாழக்கிழமை முதல் எதிர்வரும் 14 ஆம் திகதி வரை இறை பிரார்த்தனை இடம்பெறும் எனவும், அன்றைய தினங்களில், பொது இடங்களில் மஞ்சல் மற்றும் கருப்பு நிற தோரணங்களை பறக்க விட்டு இறை பிரார்த்தனையில் ஈடுபட வேண்டும் எனவும், சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனத்தின் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக் கோரி, சமூக பொருளாதார மேம்பாட்டிற்கான நிறுவனத்தின் ஏற்பாட்டில் அதன் குழுமத் தலைவர் ஜே.ஜாட்சன் பிகிராடோ தலைமையில் தமிழ் அரசியல் கைதிகளின் குடும்பத்தினர், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் இலங்கையின் வடக்கு கிழக்கு வாழ் பொது மக்கள் இணைந்து, இந்தப் பிராத்தனை வாரத்தை ஏற்பாடு செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.