கிளிநொச்சியில் சடலம் எரிப்பை எதிர்த்து போராட்டம்!

கொரோனாவால் இறக்கும் முஸ்லிம்களின் உடல்கள் தகனம் செய்யப்படுகின்றமைக்கு எதிராக கிளிநொச்சியில் இன்று (03) போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

அரச சார்பற்ற நிறுவனங்களின் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த போராட்டத்தில், சடலங்கள் எரிப்பதற்கு எதிராக கோசங்கள் எழுப்பப்பட்டுள்ளதோடு, பதாதைகளும் ஏந்தப்பட்டுள்ளன.

குறித்த போராட்டத்தில், பொது அமைப்புக்கள், அரசியல்வாதிகள் மற்றும் மதத்தலைவர்கள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.(21)