இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடாதீங்க… புற்றுநோய் சீக்கிரம் வந்திடுமாம்! உஷார்

இன்றை நவநாகரிக உலகில் பலரும் மேற்கத்திய, ரெடிமேட் உணவுகளுக்கே அடிமையாகி விட்டனர்.

இதனால் புற்றுநோய், நீரிழிவு, இரத்த அழுத்தம் போன்றவற்றால் அதிகம் மக்கள் பாதிப்படைகின்றார்கள்.

இதில் மிகவும் கொடியது என்றால் அது புற்றுநோய் தான். பொதுவாக புற்றுநோய் வருவதற்கு முக்கிய காரணம் உண்ணும் உணவுகள் தான்.

அந்த உணவுகள் என்னவென்று தெரிந்து கொண்டு, அவற்றை சாப்பிடுவதைத் தவிர்த்தால், புற்றுநோயின் தாக்குதல்களில் இருந்து தப்பிக்கலாம். தற்போது அவற்றை பார்ப்போம்.

 • இறைச்சிகளை பதப்படுத்த நிறைய கெமிக்கல்களைப் பயன்படுத்துவதால், அவற்றை மனிதன உட்கொண்டால், அவை மனிதனின் உடலில் சென்று நினைத்து பார்க்க முடியாத அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தும். ஏனெனில் பதப்படுத்தப்பட்ட உணவுகளானது புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை எளிதில் அதிகரிக்கிறது.உருளைக்கிழங்கு சிப்ஸை அதிக அளவில் உட்கொண்டு வந்தால், அதில் பதப்படுத்த, சுவைக்காக சேர்க்கப்படும் பொருட்களானது, புற்றுநோயை ஏற்படுத்தும். எனவே உருளைக்கிழங்கு சிப்ஸ் அதிகம் சாப்பிட வேண்டாம்.

  வெஜிடேபிள் எண்ணெயில் அளவுக்கு அதிகமாக ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நிறைந்துள்ளதால் அதனை அளவுக்கு அதிகமாக எடுத்து வந்தால், அவை உடலில் இதய நோய் முதல் புற்றுநோய் வரை கொண்டு வந்துவிடும்.

  வறுத்த மற்றும் உப்பு அதிகம் நிறைந்துள்ள உணவுகளான சாசேஜ், பேகான், சலாமி போன்றவற்றில் உப்பு அதிகம் இருப்பதுடன், அதனை அதிகம் உண்ணும் போது, உடல் பருமனை அதிகரிப்பதுடன், உடலில் தேவையில்லாத வேறு சில பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.

  சுத்திகரிக்கப்பட்ட கோதுமை மாவில் கிளைசீமிக் என்னும் பொருள் நிறைந்துள்ளதால் இவற்றை அதிகம் எடுத்து வரும் போது, அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.

  சுத்திகரிக்கப்பட்ட சர்க்கரைகள் சேர்க்கப்பட்ட உணவுகளை அதிகம் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. ஏனெனில் இந்த சர்க்கரையானது நீரிழிவை ஏற்படுத்துவதுடன், அவற்றில் ஃபுருக்டோஸ் அதிகம் இருப்பதால், அவை புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை அதிகரித்துவிடும்.

  செயற்கை சுவையூட்டிகளை இதனை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், உடலில் புற்றுநோய் செல்களை அதிகரித்து, புற்றுநோயை ஏற்படுத்தும். அதுமட்டுமின்றி, இந்த செயற்கை சர்க்கரையை அதிகம் சாப்பிட்டால், அவை உடல் பருமனை அதிகரித்துவிடும்.

  கார்போனேட்டட் பானங்களான கோக், சோடா போன்றவற்றை எடுத்துக் கொள்வதை தவிர்க்க வேண்டும். இல்லாவிட்டால், புற்றுநோயின் தாக்கத்திற்கு உட்படக்கூடும்.

  டின்களில் அடைக்கப்பட்ட உணவுகள் மிகவும் ஆபத்தானது. ஏனெனில் இதில் உணவுகளை வைக்கும் போது, டின்களில் உள்ள கெமிக்கல்களானது உணவில் கலந்துவிடும். பின் இதனை தொடர்ந்து நாம் உட்கொண்டால், அவை உடலில் மிகவும் மோசமான புற்றுநோய் செல்களை உற்பத்தி செய்து, உயிருக்கே உலை வைத்துவிடும்.