கிளிநொச்சியில் துப்பாக்கிகளுடன் மூவர் கைது!

விசேட அதிரடிப் படையினருக்குக் கிடைக்கப்பெற்ற தகவலுக்கமைய கிளிநொச்சி மாவட்டம், வட்டக்கச்சி – மாயவனுர் பகுதியில் சட்டவிரோதமான முறையில் மறைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் இரண்டு உள்ளூர் துப்பாக்கிகளுடன் மூவர் கைது செய்யப்பட்டனர்.

நேற்று இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் தருமபுரம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணைகள் நடைபெற்று வருகின்றன என்று தருமபுரம் பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணையின் பின்னர் அவர்கள் கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவர் என்று தருமபுரம் பொலிஸார் மேலும் கூறினர்.